உடுமலையில் விவசாயிகளுக்கு மிளகு நாற்று வினியோகம்
உடுமலையில் உள்ள விவசாயிகளுக்கு, மிளகு நாற்று வழங்கப்பட்டது.;
திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில், ஊடுபயிராக சாகுபடி செய்ய மிளகு, ஜாதிக்காய், பாக்கு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், உடுமலை பகுதி விவசாயிகளுக்கு மிளகு நாற்று வினியோகம் செய்யப்பட்டது. இதனை ஆர்வமுடன் விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.
ஊடுபயிர் சாகுபடி மூலம், களைச்செடிகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதுடன், விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கும் என, திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.