டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு
உடுமலை பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.;
தற்போது மழைக்காலம் என்பதால், அது தொடர்புடைய நோய்கள் விரைவாக பரவும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக டெங்கு, மலேரியா உள்ளிட்டவை, கொசுக்கள் மூலம் எளிதில் பரவும் என்பதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி பகுதிகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மழை நீர் தேங்கிய பகுதிகளில், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, பழைய டயர், பிளாஸ்டி போன்றவற்றை அகற்றும்படி அறிவுறுத்தினர்.
மேலும், உடுமலை நகராட்சி பகுதியில், கொசு தொல்லையால் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, வீதிகள் தோறும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. சுகாதார ஊழியர்கள் நேரில் ஆய்வு செய்து, தண்ணீர் தொட்டிகளில் மருந்து கரைசல்களை தெளித்தனர்.