உடுமலை பகுதியில் பட்டுக்கூடு விலை சரிவு; உற்பத்தியாளர்கள் பாதிப்பு
Tirupur News- பட்டுக்கூடு விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- பட்டுக்கூடு விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது"
பட்டுக்கூடு விலை சரிவு; உற்பத்தியாளர்கள் பாதிப்பு
உடுமலை;பட்டுக்கூடு விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் பட்டு வளர்ச்சித்துறையால் அமைக்கப்பட்டுள்ள, முட்டை வித்தகங்கள், இளம் புழு வளர்ப்பு மனைகளில் முட்டை பொரித்து, 7 நாட்கள் பராமரித்து, பட்டுப்புழுக்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், 21 நாட்களில், புழு வளர்ந்து, கூடு கட்டி, விற்பனைக்கு தயாராகும்.
கடந்த, சில மாதமாக பட்டுக்கூடு, கிலோ, 700 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், விலை சரிந்து, தமிழக மார்க்கெட்களில், ஒரு கிலோ சராசரியாக, 476 ரூபாய்க்கும், கர்நாடகா மார்க்கெட்களில், 576 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாறி, பனிப்பொழிவு நிலவுவதால், மல்பெரி செடிகளில், புழு, நோய் தாக்குதல், வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.
பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், பெருமளவு புழுக்கள் கூடு கட்டாமலும், இறந்தும், சுண்ணாம்பு கட்டி நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், 25 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தியும் குறைந்து, விலையும் சரிந்துள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது,
இடு பொருள், உபகரணங்கள் விலை, சமீப காலங்களில், 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பட்டுக்கூடு விலை தொடர்ந்து சரிவை சந்திக்கிறது. உற்பத்தி செலவினம் அதிகரிப்பால், குறைந்த பட்சம் ஒரு கிலோ கூடு, 600 ரூபாய் வரை விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். எனவே, விலை நிலையாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக, பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது. எனவே, பட்டு புழு வளர்ப்பு மனைகளில், வெப்பத்தை அதிகரிக்கும் வகையில், ஹீட்டர் சாதனங்களை பொருத்த வேண்டியுள்ளது. இதனை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்