பயிர்க்கடன் விவகாரம் 4ம் தேதி காத்திருப்பு போராட்டம் : விவசாயிகள் சங்கம் முடிவு

பயிர்க்கடன் வழங்கும் விவகாரத்தில் உள்ள குளறுபடியை தவிர்க்க, 4ம் தேதி காத்திருப்பு போராட்டம் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2021-12-24 02:15 GMT

பயிர் கடன் தள்ளுபடி விவகாரம் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

பயிர்க்கடன் வழங்கும் விவகாரத்தில் உள்ள குளறுபடியை தவிர்க்க, காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை காந்திசிலை அருகில், விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்ட துணை தலைவர் எஸ்.பரமசிவம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தகுதியான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 4ம் தேதி நடக்க உள்ள காத்திருப்பு போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என, முடிவெடுக்கப்பட்டது.

Tags:    

Similar News