மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு

சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சில கறவை மாடுகளுக்கு, கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-15 08:45 GMT

பைல் படம்.

தொடர் மழை மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், உடுமலை வட்டத்தில் சில இடங்களில் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தென்பட துவங்கியுள்ளது. கால்நடை வளர்ப்போரின் புகார் அடிப்படையில், உடுமலை கால்நடைத்துறை உதவி இயக்குனர் வழிகாட்டுதலின்படி, புதுப்பாளையம் கால்நடை மருந்தக டாக்டர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் கிராமத்தில், முகாமிட்டு, நோய் பாதித்த மாடுகளை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்தனர்.

சிறப்பு கோமாரி நோய் தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை காரணமாக, நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். கோமாரி நோய் பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வும், கால்நடைத்துறையினரால், மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Tags:    

Similar News