உடுமலையில் பயிர் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம்
உடுமலையில் பயிர் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம், ஆலமரத்துார் பகுதியில் பயிர்க்கடன் தள்ளுபடி, சலுகை கிடைக்காத விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பெதபம்பட்டி, குடிமங்கலம், கொங்கலநகரம், விருகல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் பயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.