உடுமலையில் வீடு, வீடாக தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்
உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.;
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. நகராட்சி சுகாதார பணியாளர்கள், மாரியம்மன் கோவில் வீதி, தங்கம்மாள் ஓடை உள்ளிட்ட பல இடங்களில், வீடு, வீடாக சென்று, தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொண்டனர். மேலும், வீடுகளில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரம் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதில், மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதே போன்று கண்ணநாயக்கனுார் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும், சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.