வண்ணமயமானது பள்ளி: மாணவர்கள் குஷி
உடுமலை, உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது.;
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், வகுப்பறை சுவர்களில் வர்ணம் தீட்டி, கற்றல் சூழலை மேம்படுத்தம் பணியில் 'ட்ரீம் 20' அமைப்பினர் மற்றம் திருப்பூர் 'பட்டாம்பூச்சி இயக்கத்தினர்' ஈடுபட்டனர். குழந்தைகளை கவரும் கார்ட்டூன், விலங்கு உள்ளிட்ட இயற்கை சார்ந்த ஓவியங்களை அவர்கள் வரைந்ததன் மூலம், பள்ளி வளாகம் புதுப்பொலிவு அடைந்துள்ளது.