காெராேனாவுக்கு பிறகு கோவை, மதுரை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்
கொரோனா பரவலால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்க உள்ளது.
கொரோனா பரவலால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவை, மீண்டும் துவங்க உள்ளது.
கோவை – பொள்ளாச்சி, பொள்ளாச்சி – கோவை, கோவை – மதுரை, மதுரை - கோவை இடையேயான தினசரி பயணிகள் ரயில் சேவை, கொரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீண்டும் துவங்க உள்ளது. இதனால், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி சுற்றுவட்டார பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை – மதுரை இடையேயான பயணிகள் ரயில், வரும், 10ம் தேதி துவங்க உள்ளது. மதுரை – கோவை இடையேயான பயணிகள் ரயில், வருகிற,11ம் தேதி துவங்க உள்ளது. கோவை – பொள்ளாச்சி ரயில் சேவை, 13ம் தேதியும், பொள்ளாச்சி – கோவை ரயில் சேவை, வரும், 14ம் தேதியும் துவங்க உள்ளது.
கோவையில் இருந்து, பிற்பகல், 2:00 மணியளவில் புறப்படும் கோவை – மதுரை பயணிகள் ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு, கோமங்கலம், உடுமலை, மைவாடி ரோடு, புஷ்பத்தூர் ஆகிய ஸ்டே ஷன்களில் நின்று மாலை, 4.40 மணிக்கு பழனியை சென்றடையும். அங்கிருந்து, மதுரைக்கு செல்லும். இது, தினசரி ரயிலாக இயக்கப்பட உள்ளது.
பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுவதால் கல்லூரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.