கூட்டுறவு சங்கத்துக்குள் புகுந்த பாம்பு
கூட்டுறவு சங்கத்துக்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து அடர் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.;
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை குரல் குட்டையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இந்த கூட்டுறவு சங்கத்திற்குள் ஒரு நாக பாம்பு புகுந்தது. இதனையடுத்து ஊழியர்கள் அச்சமடையவே, வனத்துறை விரைந்து வந்து, பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.