சரி செய்யப்பட்ட கால்வாய் அடைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஏரிப்பாளையத்தில், வாய்க்கால் அடைப்பு சரி செய்யப்பட்டது.;

Update: 2021-12-08 05:45 GMT

உடுமலை ஏரிபாளையத்தில் கால்வாய் அடைப்பு சுத்தம் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள கால்வாயில் முட்புதர்கள் நிறைந்தும், மழைநீர் அதிகமாக சென்று கொண்டிருந்த நிலையில், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவுறுத்தல்படி, பொக்லைன் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு, மழைநீர் வெளியேற மற்றும் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள மக்கள் வடிகாலில் குப்பைக் கொட்டாமல், மழைநீர் அடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News