திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

Tirupur News- உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் கனமழையால் திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-11-10 08:16 GMT

Tirupur News- பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்துவிடும் அபாயம் நிலவி வருவதால் அதிகாலை நேர பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் உண்டியல்கள் ஊழியா்களால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, கோயில் அருகே கடை வைத்திருப்பவா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கோயில் நிா்வாகம் அனுமதிக்கவில்லை.

உடுமலையில் மழை:

உடுமலை நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பழனி பாதையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இதேபோல உடுமலை வட்டத்தில் பல்வேறு கிராமங்கலும் தொடர்ந்து மழை பெய்தது.

இப்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. நாளை மறுதினம் பண்டிகை  கொண்டாட்டப்பட உள்ள நிலையில், திருமூர்த்தி மலை முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால் உடுமலை, தாராபுரம், திருப்பூர், பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு சுற்றுலாவாக வர அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தொடரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வௌ்ளப் பெருக்கு, பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை போன்ற பாதிப்புகளால் மக்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News