உடுமலை அருகே ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நள்ளிரவில் ஏடிஎம்., மையத்தை உடைத்து, பணம் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-10-29 00:30 GMT

உடுமலையில், ஏடிஎம் மையத்தை உடைத்து, பணம் திருட முயன்ற காட்சி, சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிபாளையம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே, பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நள்ளிரவில், முகமூடி அணிந்த நபர் உள்ளே நுழைந்து, இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.

அங்குள்ள சிசிடிவி கேமராவில், தனது முகம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கேமாரவை தனது லுங்கி மற்றும் அட்டை பெட்டியால் மூடி வைத்துவிட்டு, திருட முயற்சித்துள்ளார். இருப்பினும், இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இக்காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. புகாரின் பேரில், உடுமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News