உடுமலை கோவிலில் தை அமாவாசைக்கு ஏற்பாடு

தை அமாவாசைக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வந்தனர்.

Update: 2022-01-31 13:00 GMT

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், பஞ்சலிங்கம் அருவி, அடிவாரத்தில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தை அமாவாசைக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வந்தனர்.

ஆன்மிகம் மற்றும் சுற்றுலாதலமாக உள்ள திருமூர்த்திமலையில், தை, புரட்டாசி, ஆடி அமாவாசை தினங்கள் சிறப்பானதாகும். உடுமலை, பொள்ளாச்சி என சுற்றுப்புற விவசாயிகள், தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன், அமணலிங்கேஸ்வரரை வழிபடுவதையும், வேளாண் வளம், கால்நடைச்செல்வங்கள் பெருக, மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்து, மும்மூர்த்திகளை வழிபடுவதை பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.

இன்று தை அமாவாசை தினமாக உள்ளதால், சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள், நுாற்றுக்கணக்கான ரேக்ளா, சவாரி வண்டி மற்றும் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் வந்தனர். இதனால், திருமூர்த்திமலை ரோடுகளில், பழமையான மாட்டு வண்டிகளின் அணிவகுப்பு போல் திருமூர்த்திமலை, களைகட்டியது.

அதே போல், பிரசித்தி பெற்ற, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தை அமாவாசையன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, பஞ்சலிங்கம் அருவியில், நீராடி, மும்மூர்த்திகளை வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கோவில் வளாகம் மற்றும் பிரதான ரோடுகளில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

நேற்று அதிகாலை, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடை பிடித்து, பக்தர்கள் தரிசனம் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News