உடுமலை: அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் கோரிக்கை

உடுமலையில், அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-01-15 05:30 GMT

உடுமலையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, புக்குளத்தில், நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், 26.26 கோடி ரூபாய் செலவில், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தரை தளத்துடன் மூன்று மாடிகளுடன், 320 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை மற்றும் பால்கனியுடன், 400 சதுர அடி பரப்பளவில் வீடுகள் உள்ளன.

தங்கம்மாள் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2021 பிப்ரவரி துவக்கத்தில், திறப்பு விழா நடத்தப்பட்டது. இருப்பினும், இதுவரை பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. 'விரைவில் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News