காற்றுக்கு திணறும் பரிசல்கள்: மீட்க உதவும் மோட்டார் படகு
காற்றுக்கு திணறும் பரிசல்களை, இழுத்துவர மோட்டார் படகு பயன்படுத்தப்படுகிறது.;
உடுமலை, அமராவதி அணையில் ஒப்பந்த அடிப்படையில் மீனவர்கள் பலர் மீன் பிடிக்கின்றனர். கட்லா, ரோகு, மிருகால், ஜிலேபி உள்ளிட்ட பலவகை மீன்கள் அணையில் கிடைக்கின்றன. அவற்றை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்திடம் விற்கின்றனர். தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவில் உள்ளது. அணையில் 6 கிமீ., சுற்றளவுக்கு சென்று மீன் பிடிக்கின்றனர். காற்று வீசும் போதும், துடுப்பு பயன்படுத்தி கரைக்கு வருவதில் மீனவர்களுக்கு சிரமம் ஏற்படுவதால், மோட்டார் படகில் பரிசல்களை கட்டி, இழுத்து வருகின்றனர்.