உடுமலையில் அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்

பொள்ளாச்சி, பூசாரிப்பட்டி ஊராட்சி அதிமுக இளைஞர் அணியினர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.;

Update: 2022-02-03 13:00 GMT

பூசாரிப்பட்டி ஊராட்சி அதிமுக இளைஞர் அணியினர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி (தெற்கு) வடக்கு ஒன்றியம் பூசாரிப்பட்டி ஊராட்சி, அதிமுக இளைஞர் அணியினர் அக்கட்சியிலிருந்து விலகி திமுக ஒன்றிய பொறுப்பாளர் காணியப்பன் முன்னிலையில், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

சுரேஷ்பாபு, ரமேஷ், குணா, குமார், முத்துக்குமார், மணியன், மோகன்ராஜ், பிரசாந்த், கார்த்தி, சந்தோஷ்குமார், மாதவன், ஆரான், அருண்குமார், பழனிச்சாமி, பசுபதி, பிரகாஷ், அஜ்மல், மோகன் ஆகியோர் கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்வில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முபாரக் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News