உடுமலை: மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை

உடுமலைப்பகுதி விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் துறை யோசனை தெரிவித்து உள்ளது.

Update: 2021-06-06 12:41 GMT

உடுமலை சுற்று வட்டாரத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர்களின் முழுமையான வளர்ச்சிக்கு 16, வகையான ஊட்டச்சத்துகள் ஆதாரமாக உள்ளது. பேரூட்டம், இரண்டாம் நிலை சத்துக்கள், நுண்ணூட்டங்கள் இடுதல்  முக்கிய பங்கு வகிக்கிறது. மண் பரிசோதனை மூலம் பயிர் வளர்ச்சியின் மூலம் மகசூல் அதிகரிக்கலாம்.

இது குறித்து, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி, கூறியுள்ளதாவது: வேளாண் நிலைகளில் விவசாயம் செய்யும் வகையில் உரச்செலவை குறைத்தும், மகசூலை பெருக்கும் வகையில் மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உழவுக்கு முன் மண் மாதிரி எடுக்க வேண்டும். மாதிரி சேகரிப்புக்கு வரப்பு மற்றும் வாய்க்கால் ஓரம், மர நிழல், ஈரமான பகுதி, உரம் குவிக்கும் இடம் தவிர்க்க வேண்டும்.

ஏக்கருக்கு 10, முதல் 12, இடங்களில் வி வடிவத்தில் அரை முதல் முக்கால் அடி ஆழம் குழி எடுத்து பக்கவாட்டில் மேலிருந்து கீழாக சுரண்டி மண் மாதிரி சேகரிக்க வேண்டும். மண் பரிசோதனை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள்,  வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News