உடுமலை; சந்தனக்கட்டைகளுடன் பிடிபட்ட 3 பேர் கைது

Tirupur News,Tirupur News Today-உடுமலை அருகே அமராவதி வனச்சரகம் அரளிப்பாறை பகுதியில், சந்தனக்கட்டைகளை எடுத்துவந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2023-06-25 08:27 GMT

Tirupur News,Tirupur News Today- உடுமலை வனப்பகுதியில், சந்தனக்கட்டைகளுடன் பிடிபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி வனச்சரகம் அரளிப்பாறை என்ற இடத்தில் 3 மர்ம நபர்கள், கையில் பைகளுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர். வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அப்பகுதிக்குள் அந்நிய நபர்கள் நடமாட்டத்துக்கு அனுமதி இல்லை. அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட பகுதியில், மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது. அவர்கள் கைகளில் கொண்டு வந்த பெரிய பைகளில் சந்தனக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கேரள மாநிலம் காந்தலூரை சேர்ந்த மயில்சாமி (வயது 37), பால்ராஜ் (43), சக்தி வேல்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்தனக்கட்டைகளை கடத்திய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 13 கிலோ சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சந்தனக்கட்டைகளை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து கைதானவர்களிடம் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், அமராவதி வனச்சரகர் சுரேஷ், வனவர் செந்தில்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறையினர் தொடர் கண்காணப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நிய நபர்கள் 3 பேர், வனப்பகுதிக்குள் வந்தது, சந்தனக்கட்டைகளை எடுத்து வந்தது எப்படி என்பது குறித்தும், அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மேலும், இதற்கு முன்பு இதுபோல் சந்தனக்கட்டைகள் கடத்தப்பட்டதா, இதற்கு யாரேனும் உடந்தையாக இருக்கிறார்களா என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News