அவிநாசி அருகே தடுப்பு சுவரில் மோதிய கார்; இசையமைப்பாளர் உள்பட இருவர் உயிரிழப்பு

Tirupur News,Tirupur News Today- அவிநாசி அருகே, தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் திரைப்பட இசையமைப்பாளர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்தனர்.;

Update: 2023-09-04 03:21 GMT

Tirupur News,Tirupur News Today- விபத்தில், அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்த கார். 

Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள அவிநாசி அருகே சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் திரைப்பட இசையமைப்பாளர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர், பலத்த காயம் அடைந்தனர்.

சென்னையை சேர்ந்தவர் தமிழ் அடியான் (வயது 50). இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். இவரும், சென்னையை சேர்ந்த இசையமைப்பாளரான தசி என்கிற சிவக்குமார் (49) ஆகியோரும் நண்பர்கள். சிவக்குமார், திரைப்படம் மற்றும் டிவி. நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்து வந்துள்ளார். திரைப்பட இயக்குனர் மூவேந்தர் (55). மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜன் (50) ஆகிய 4 பேரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் ஆகிய 4 பேரும், சொந்த வேலை காரணமாக ஒரு சொகுசு காரில் சென்னையில் இருந்து கேரளா சென்றனர். பின்னர் அதே காரில் நேற்று, கேரளாவில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.

காரை தமிழ் அடியான் ஓட்டி வந்தார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம், அவிநாசி பை-பாஸ் ரோட்டில் அவர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். பச்சாம்பாளையம் பிரிவு அருகே கார் வேகமாக வந்த போது திடீரென்று நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி, பலத்த சேதம் அடைந்தது. காரில் பயணித்து வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், காருக்குள் சிக்கி இருந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள்,  தமிழ் அடியான் மற்றும் தசி என்கிற சிவகுமார் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News