நாளை சுதந்திர தினம்; திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் ‘உஷார்’
Tirupur News,Tirupur News Today- இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தினவிழா, நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்பபடுத்தப்பட்டுள்ளன.;
Tirupur News,Tirupur News Today- நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் என 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழா நடைபெறும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்குள் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து சுற்றி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன் உத்தரவின் பேரில் காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்குள் வரும் பயணிகளின் உடைமைகளை போலீசார், சோதனை செய்கின்றனர். சந்தேகம்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா, என்பதையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் அதிகளவில் வந்து செல்லும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், சினிமா தியேட்டர்கள், பூங்கா, அரசு அலுவலகங்கள், மார்க்கெட் பகுதிகள், முக்கிய கடை வீதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.