திருப்பூரில் வாகன ஸ்டாண்டுகளில் கட்டணம் அதிகம்: பொதுமக்கள் புகார்
tirupur; two weelar stand, fee problem- திருப்பூரில் ஸ்டாண்டுகளில் வாகனக்கட்டணம் அதிக வசூலிப்பதாக பொதுமக்கள்,புகார் தெரிவித்துள்ளனர்.;
வாகன ஸ்டாண்டுகளில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்காக கட்டணம் அதிகமாக இருப்பதைல் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பனியன் தொழில் நகரமான திருப்பூரில், வாகனங்கள் பயன்பாடு மிக அதிகம். தினமும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வந்து செல்லும் நகரமாக உள்ளது. தொழில் சார்ந்தும், வியாபாரம், அலுவல் மற்றும் சொந்த தேவைகளுக்காகவும் வாகன பயன்பாடு முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, டூ வீலர் பயன்பாடு, திருப்பூரில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்ட மக்கள், குறிப்பாக தொழிலாளர்கள் திருப்பூர் தினமும் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலான மக்கள், தங்களது டூ வீலர்களை, டூ வீலர் ஸ்டாண்ட்களில் விட்டு செல்வது வழக்கம்.பொது இடங்களில் பாதுகாப்பின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் திருடு போவதால், ஸ்டாண்ட்களில் வாகனங்கள் நிறுத்தப்படுத்துவதும் அவசியமாகிறது. இச்சூழ்நிலையில், வாகனம் நிறுத்தும் வாடகை ஸ்டாண்ட்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஒரு நாளைக்கு 20ரூ கட்டணம் என்பது, அதிகமாக உள்ளது. சில ஸ்டாண்ட்களில் ரூ.15மற்றும்10 எனக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்ஸ்டாண்ட் மற்றும் ரயில் வேஸ்டேஷன் பகுதிகளில் உள்ள ஸ்டாண்ட்களில் பார்க்கிங் கட்டணம் அதிகம் என்பது. மக்களுக்கு மன உளைச்சலை தருகிறது. ஒரு நாளைக்கு 24மணிநேரம் என்பதை கொண்டு, ஒருமணி நேரம் கூடுதல் ஆனாலும் 20ரூகட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் நிறுத்தப்படும் வாகனங்கள் வெயிலில் காய்கின்றன. சில ஸ்டாண்ட்களில் பெட்ரோல் மாயமாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுத்து, பார்க்கிங் கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.