உடுமலை; தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க மக்கள் கோரிக்கை
Tirupur News. Tirupur News Today- கோடை காலத்தில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tirupur News. Tirupur News Today- உடுமலை; திண்டுக்கல் - பாலக்காடு வழித்தடம் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு 2015ல் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் மின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது.தற்போது உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்தூர், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளிதேர்வுகள் முடிவடைய உள்ளன.
கோடை விடுமுறை துவங்கியவுடன் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களை அதிகளவில் பயன்படுத்துவர். கோடை கால சுற்றுலா செல்ல விரும்பும் மக்கள் பெரும்பாலானோர், தொலைதுார பகுதிகளுக்கு, ரயில்களில் செல்வதை வசதியாக கருதி, பயணிக்க விரும்புவர். மேலும், பஸ் கட்டணங்களை விட, ரயில் கட்டணம் மிக குறைவு. பயணமும் மிக பாதுகாப்பானது. எனவே, ரயில்களில் செல்லும் மக்களின் எண்ணிக்கை கோடை காலத்தில், கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் தற்போது செல்லும் ரயில்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே, கோடை காலத்தில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
விஷூ பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் 13-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கண்ணூரில் இருந்து வருகிற 14-ம் தேதி காலை 8.35 மணிக்கு ரயில் புறப்படும்.
விஷூ பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வரை வருகிற 13-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில், வருகிற 13-ம் தேதி மதியம் 3.10 மணிக்கு புறப்படும் ரயில் சேலத்துக்கு இரவு 8.25 மணிக்கும், ஈரோட்டுக்கு 9.30 மணிக்கும், திருப்பூருக்கு 10.05 மணிக்கும், கோவைக்கு 11.12 மணிக்கும் சென்று மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது.
இதுபோல் கண்ணூரில் இருந்து வருகிற 14-ம் தேதி காலை 8.35 மணிக்கு புறப்படும் ரயில் கோவைக்கு மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.