சுட்டெரிக்கும் வெயில்; கால்நடைகளை பாதுகாக்க, விவசாயிகளுக்கு ‘அட்வைஸ்’
Tirupur News. Tirupur News Today- கோடை காலத்தில் கால்நடைகளுக்கு வெப்ப அயர்ச்சி நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், நல்ல தண்ணீரை வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tirupur News. Tirupur News Today- உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்ப்புத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. விவசாயம் அல்லாத காலங்களில், கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு வெப்ப அயர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது. சுத்தமான தண்ணீரை வழங்குவதன் வாயிலாக, வெப்ப அயற்சி வராமல் தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது,
நிழலில்தஞ்சம் அடைதல், அதிகமான தண்ணீர் பருகுதல், பசியின்மை, அதிகமானஉமிழ்நீர் வடிதல், அதிக உடல் வெப்ப நிலையால் வாய் திறந்த நிலையில் சுவாசித்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.கலப்புத் தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு துாவும் போது,மாடுகளின் தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரிக்கும்.வறண்ட வெப்ப நிலையின்போது கால்நடைகள்அதிக ப்படியான உலர் மற்றும் நார் சத்துக்களையும், குறை வாக செரிக்க கூடிய தீவனங்களையும் உட்கொள்கின்றன. சுத்தமான தண்ணீரை முறையாக பருகினால் கால்நடைகளுக்கு வெப்ப அயர்ச்சி நோய் ஏற்பட வாய்ப்பில்லை,
.இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் நாளை (20-ம் தேதி) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
திருப்பூா் பழைய பஸ் ஸடாண்ட் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கான நாட்டுக் கோழி வளா்ப்பு இலவச பயிற்சி முகாம் நாளை 20-ம் தேதி ( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. நாட்டுக்கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.