திருப்பூர்- உடுமலைக்கு இரவில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

Tirupur News, Tirupur News today- திருப்பூரில் இருந்து உடுமலைக்கு, இரவு நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-05-05 13:25 GMT

Tirupur News, Tirupur News today- திருப்பூரில் இருந்து உடுமலைக்கு, இரவு நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை. (கோப்பு படம்) 

Tirupur News, Tirupur News today - உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களின் பணியாற்றுவதற்காக தினமும் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வேலைக்கு சென்று வரும் பொதுமக்களுக்கு நேரங்களில் சரியான பஸ் வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.

உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தின் சார்பில், கிராம மற்றும் தொலைதுார வழித்தடங்களில் நுாற்றுக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், கோவை செல்வதற்கு, பழநி மற்றும் உடுமலையிலிருந்து நள்ளிரவு மற்றும் அதிகாலையிலும், பஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தேவையான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.ஆனால் உடுமலை - திருப்பூர் இடையிலான பஸ் போக்குவரத்து இரவு, 10:25 மணி வரை மட்டுமே இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

உடுமலை - திருப்பூர் செல்லும் வழிதடத்தில், பல்லடம் மற்றும் குடிமங்கலம், கோட்டமங்கலம் உட்பட பல்வேறு கிராமப்புற மக்களுக்கும், இத்தொலைதுார பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.இக்கிராமங்களிலிருந்து உடுமலைக்கு தொழில் ரீதியாக வரும் மக்கள், இரவு நேரத்தில், கிராமப்புற பஸ்களும் இன்றி, திருப்பூர் செல்லும் பஸ்களும் இல்லாததால் வேறுவழியின்றி, பஸ் ஸ்டாண்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது. உடுமலையிருந்து திருப்பூருக்கு இரவு 10:20 மணிக்கும், திருப்பூரிலிருந்து உடுமலைக்கு இரவு 10:25 மணிக்கு இறுதி பஸ்சும் இயக்கப்படுகிறது.இந்த பஸ்சை தவறவிடும் பயணிகள், திருப்பூரிலிருந்து வால்பாறைக்கு 11மணி பஸ்சில் பொள்ளாச்சி சென்று பின் அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் உடுமலை வந்தடைகின்றனர்.

இத்தகைய சிரமத்தை தவிர்க்கவும், கிராமப்புற மக்கள் மற்றும் திருப்பூர் செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில் இரவில் திருப்பூருக்கு பஸ் இயக்கப்படும் நேரத்தை கூடுதலாக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News