அபராதமின்றி மின்கட்டணம்; அமைச்சருக்கு விசைத்தறியாளர் கோரிக்கை

Tirupur News. Tirupur News Today- அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின்வாரியத்துறை அமைச்சருக்கு, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-30 13:33 GMT

Tirupur News. Tirupur News Today- அபராதமின்றி மின்கட்டணம்; விசைத்தறியாளர் கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today-  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள், விசைத்தறியை நம்பி வாழ்கின்றன. பல தலைமுறைகளாக கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த கருமத்தம்பட்டி, சோமனுார், பல்லடம், அவிநாசி என சுற்றுவட்டார பகுதிகளில், விசைத்தறி தொழில் பிரதானமாக இருந்து வருகிறது.

தமிழக அரசின், பொங்கல் பண்டிகை இலவச வேட்டி சேலை உட்பட பல ஆடை தயாரிப்புகளை, இங்குள்ள விசைத்தறிக்கூடங்களில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், மற்ற தொழில்களை போலேவ, விசைத்தறி தொழிலிலும் பல சிரமங்களும், சிக்கல்களும் நீடிக்கிறது. அதுபோல், மின்கட்டண உயர்வும், இந்த தொழிலை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அறிவித்த மின் கட்டண உயர்வில் இருந்து 50 சதவீதத்தை அரசு குறைத்தது.

மேலும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக வழங்கவும் அறிவிப்பு வெளியானது. போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதை தவணை முறையில் செலுத்த அவகாசம் வேண்டும் என விசைத்தறியாளர்கள், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''விசைத்தறியாளர் கோரிக்கையை ஏற்று தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ளதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் என்ற முறையில் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். விசைத்தறியாளர் நலனை கருத்தில் கொண்டு அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மீண்டும் மின் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம், என்றார். 

Tags:    

Similar News