குண்டடம் சந்தையில், வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த மாடுகள்
Kundadam Santhai-திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் வாரச்சந்தைக்கு, மாடுகள் வரத்து அதிகரித்ததால் மாடுகளின் விலைகுறைந்து காணப்பட்டது.;
tirupur News, tirupur News today- மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை சந்தை ( கோப்பு படம்)
Kundadam Santhai-குண்டடத்தில் சனிக்கிழமை தோறும், அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணிவரை கோழிகள், ஆடுகள் விற்பனை நடைபெறும். பின்னர் மதியம் ஒரு மணி முதல் மலை 6 மணி வரை மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு திருப்பூர், குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விற்பனைக்காக சிந்து இன மாடுகள், வளர்ப்புக் கன்றுகள், கிடாரிகள், காளைகன்றுகளை கொண்டு வருகின்றனர். இவைகளை வாங்க வியாபாரிகள் கோவை, ஈரோடு, ஊட்டி, ஈரோடு, தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தைக்கு வாரம்தோறும் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன
இதுகுறித்து, மாட்டு வியாபாரிகள் கூறியதாவது,
குண்டடம் வராசந்தைக்கு, கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக இருப்பதால், மாடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாடுகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கடந்த வாரங்களில் ரூ.40 ஆயிரம் வரை விலைபோன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் ரூ.20ஆயிரம் வரை விலைபோன வளர்ப்புக் கிடேரிகள் இந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு விற்றது. இறைச்சிக்கு ரூ.25 ஆயிரம் வரை விலை போன மாடுகள் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சியால் மாடுகளை விற்க கொண்டு வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த விலை வீழ்ச்சி சில வாரங்கள் வரை நீடிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் தவிர்த்து, சுற்றுவட்டார பகுதிகள் அனைத்துமே, பெரும்பாலும் விளைநிலங்கள் நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. குறிப்பாக குண்டடம், தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், உடுமலை சார்ந்த பகுதிகளில் விவசாய நிலங்களே அதிகமாக .உள்ளன. அதனால், விவசாயிகளும், கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்களில் பலரும், கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் ஆடுகள், மாடுகள், நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விவசாய பயன்பாடு, பால் உற்பத்திக்கான அடிப்படையில், மாடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதே போல், ஆடுகள், நாட்டுக்கோழிகள் இறைச்சிக்காக அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. நாளடைவில், மாடுகள் இறைச்சிக்காகவும், விற்பனை செய்யப்படுகின்றன. மாடுகள் வளர்ப்புக்காகவும், விவசாய தேவைக்காகவும் மாடுகளை வாங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நேற்று குண்டடம் வாரச்சந்தையில், மாடுகளின் வரத்து எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், விற்பனை விலை குறைக்கப்பட்டது. இது, மாடுகளை வாங்க வந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், மாடுகளை விற்க வந்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2