திருப்பூரில் மல்லித்தழை விலை ‘கிடுகிடு’ - இல்லத்தரசிகள் கவலை
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மார்க்கெட்டில் மல்லித்தழையின் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் மல்லித்தழை பல்லடம், படியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட மல்லித்தழைகள் அதிகளவில் கருகி விட்டன. மேலும், கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சில இடங்களில் அவை அழுகியுள்ளன. இதனால் திருப்பூர் மார்க்கெட்டுக்கு இதன் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒரு கட்டு ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.10 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது விலை கிடு,கிடுவென உயர்ந்து ஒரு கட்டு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இல்லத்தரசிகள் கவலை
பொதுவாக சமையலுக்கு மல்லித்தழை அதிகளவில் பயன்படுத்தப்படும் நிலையில், தற்போது விலை அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளை கவலையடையச் செய்துள்ளது. இனிமேல், கொத்தமல்லித் தழையை கிள்ளி தான் போட வேண்டுமா என பெண்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மல்லித்தழை விலை அதிகரிப்பால் கடை வியாபாரிகளும் மார்க்கெட்டில் இருந்து குறைவான அளவிலேயே மல்லித்தழைகளை வாங்கி செல்வதாக, மார்க்கெட் வியாபாரிகள் கூறுகின்றனர்.
பொதுவாக காய்கறி, மளிகை கடைகளில் காய்கறிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறிதளவு மல்லித்தழை, கறிவேப்பிலை இலவசமாக கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் எவ்வளவு காய்கறிகள் வாங்கினாலும் மல்லித்தழையை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொத்தமல்லி, சமையலில் முக்கியமானதாக சுவைக்கும், மணத்துக்கும் சேர்க்கப்படுகிறது. தவிர, சிலர் இட்லி, தோசை, சாதத்துக்கும் சேர்த்து சாப்பிட, கொத்தமல்லி தழை சட்னியை விரும்பி சாப்பிடுவது வழக்கம். புதினா சட்னியை போல, கொத்தமல்லி சட்னியும் இட்லி, தோசை மற்றும் பலகாரம் சைடு டிஷ் ஆக சாப்பிட சுவையாக இருக்கும். தவிர, மளிகை கடைகளில் கூட இப்பொது கொத்தமல்லி தழை விற்பனையில் இருப்பதில்லை. ஒரு கட்டு வாங்கி வந்தாலும், சில்லரை விலையில் விரைவில் விற்றுவிடுவதாக கூறுகின்றனர். இந்த கொத்தமல்லி தழை தட்டுப்பாடு விரைவில் தீர வேண்டும், அப்போதுதான் குறைந்த விலையில் மல்லித்தழை கிடைக்கும் என, மார்க்கெட் வியாபாரிகள் கூறுகின்றனர்.