கோவை- சேலம் மெமு ரயில் சேவை தற்காலிக ரத்து
Tirupur News. Tirupur News Today-திருப்பூர் வழியாக இயக்கப்படும் கோவை- சேலம் மெமு ரயில் சேவை 31-ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
Tirupur News. Tirupur News Today - திருப்பூர் வழியாக இயக்கப்படும் கோவை- சேலம் மெமு ரயில் சேவை 31-ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஈரோடு- சேலம் ரயில்வே ஸ்டேஷன் இடையே தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆகையால் வருகிற 31-ம் தேதி வரை கோவை- சேலம் (06802) மெமு ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் சேலம்- கோவை (06803) ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இது போன்றே, ஆலப்புழா- தன்பாத் (13352) ரயில் 31-ம் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 30 நிமிடங்கள் வரை நின்று செல்லும். எர்ணாகுளம்- டாடாநகர் (18190) புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ரயில் 31- ம் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - ஜோத்பூருக்கு சிறப்பு ரயில்
தாம்பரத்தில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 25-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ம் தேதி ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரயில் சனிக்கிழமை மாலை 5.20 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.
இந்த ரயில் வியாழக்கிழமை சேலத்துக்கு இரவு 8.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 9.25 மணிக்கும், திருப்பூருக்கு 10.10 மணிக்கும், கோவைக்கு 11.05 மணிக்கும் செல்லும். இதுபோல் ஜோத்பூரில் இருந்து 28-ம் தேதி, அடுத்த மாதம் 4-ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7.15 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் செவ்வாய்க்கிழமை கோவைக்கு காலை 10.15 மணிக்கும், திருப்பூருக்கு 11.05 மணிக்கும், ஈரோட்டுக்கு 11.55 மணிக்கும், சேலத்துக்கு 1.05 மணிக்கும் செல்லும்.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.