சைக்கிளிங் போட்டியில் பங்கேற்க, திருப்பூர் மாவட்ட வீரர்களுக்கு அழைப்பு

Tirupur News-விருதுநகா் மாவட்டத்தில் நடக்க உள்ள மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில், திருப்பூரை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.;

Update: 2023-11-05 10:34 GMT

Tirupur News- சைக்கிளிங் போட்டியில் பங்கேற்க அழைப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- விருதுநகா் மாவட்டத்தில் நடக்க உள்ள மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் பங்கேற்க வீரா், வீராங்கனைகளுக்கு திருப்பூா் மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாடு சைக்கிளிங் கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நவம்பா் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், 12 வயதுக்குகீழ் உள்ள மாணவா்களுக்கு 7 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டரும், 14 வயதுக்குகீழ் உள்ள மாணவா்களுக்கு 10 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 7 கிலோ மீட்டரும், 15 மற்றும் 16 வயதுள்ள மாணவா்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும் போட்டிகள் நடைபெறுகின்றன.

அதேபோல, 17 மற்றும் 18 வயதுள்ள மாணவா்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும், ஆண்களுக்கு 30 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 20 கிலோ மீட்டரும், இன்டியன் சைக்கிள் போட்டிகள் ஆண்களுக்கு 5 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 3 கிலோ மீட்டரும் நடைபெறுகின்றன.

இதில், பங்கேற்கும் நபா்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. வயது சான்றிதழ், ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். வெற்றிபெறும் நபா்களுக்கு பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94433-39299, 98656-45489 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சை்கிளிங் வீரர்கள், வீராங்கணைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்  கொள்ளலாம்.

Tags:    

Similar News