நவம்பர் 1ம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த திருப்பூர் கலெக்டர் உத்தரவு
Tirupur News- உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் நவம்பா் 1 -ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
Tirupur News,Tirupur News Today- உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் நவம்பா் 1 -ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடக்க உள்ளன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் நவம்பா் 1-ம் தேதி காலை 11 மணி அளவில் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.
கூட்டத்தில், நவம்பா் 1 -ம் தேதியை தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்த முதல்வா் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல். கிராம ஊராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியா்களை கெளரவித்தல்,
கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிா் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி மூலம் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல் குறித்தும் விவாதிக்கப்படும்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 265 கிராம ஊராட்சிகளிலும் மேற்படி கூட்டப் பொருள்கள் குறித்து நவம்பா் 1 -ம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.
கிராம சபைக் கூட்டங்களை திறம்பட நடத்த ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, கிராம மக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.