திருப்பூர் மாநகராட்சியில் இன்று நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம் ரத்து
இருப்பு இல்லாததால், திருப்பூர் மாநகராட்சியில் இன்று 34 இடங்களில் நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.;
திருப்பூர் மாநகராட்சியில் 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட 34 இடங்களில், தினசரி தலா 150 தடுப்பூசி வீதம்போடப்பட்டு வந்தது. தடுப்பூசி பற்றாகுறை உள்ளிட்ட பிரச்சனையால், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்து, தடுப்பூசி போடப்பட்டது. கடைசியாக திருப்பூர் மாவட்டத்திற்கு 16 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி வந்து, அவை அனைத்தும் போடப்பட்டன.
இதனால், தடுப்பூசி தீர்ந்ததால், மாநகராட்சிக்குட்பட்ட 34 இடங்களில் இன்று நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பு இல்லாத காரணத்தால், இன்று தடுப்பூசி போடப்படும் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.