திருப்பூர் மாநகராட்சி சார்பில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி சார்பில், நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து கூட்டம் நடந்தது.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாநகரகாவல் துறையும் இணைந்து, வணிக நிறுவனங்களுக்கான, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் அதன் நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்தான கூட்டம், ராமசாமிமுத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் மாநகராட்சிஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். மாநகர காவல் ஆணையர் வனிதா முன்னிலையில் வகித்தார்.
இக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு அரசு நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்ற அனைத்து திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், பேக்கரிகள், தியேட்டர்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு அரசு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆலோசனை வழங்கினர்.
தடுப்பூசி போடுவதின் அவசியம், கட்டாயம் முககவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும், கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போட வேண்டும் என தெரிவிக்கபட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர், அலட்சியம் காட்டக்கூடாது. அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் இதில் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் டாக்டர் பிரதீப், கிருஷ்ணகுமார், உதவி ஆணையர் கண்ணன் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.