திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி இல்லை: சுகாதார துறை அறிவிப்பு

தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2021-07-25 02:31 GMT

திருப்பூர் மாநகராட்சியில் 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் முதல் தவணை, 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி கையிருப்புக்கு தகுந்தவாறு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால், மாநகராட்சிக்கு உட்பட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் தடுப்பூசி இன்று செலுத்தப்பட மாட்டாது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News