திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் அருகே விபத்தில் குழந்தை பலி; தாய் படுகாயம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில், தாயுடன் சென்ற 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-09-11 14:14 GMT

திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பனியன் கம்பெனியில் தொழிலாளி வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி தீபா. இவர்களின் 4 வயது  பெண் குழந்தை தக்‌ஷனா.

திருப்பூர் பூம்புகார் நகரில் உள்ள தாய் வீட்டுக்கு, தீபா தனது குழந்தை தக்‌ஷனாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, ரோட்டின் பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது உரசி, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி யது. இதில், தீபாவும் தக்‌ஷனாவும் சாலையில் விழுந்துள்ளனர்.

அப்போது, பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மினி பஸ்சின் பின் சக்கரம், குழந்தை மற்றும் தாயின் மீது ஏறி, சில அடிதூரம் இழுத்து வந்துள்ளது. இந்த விபத்தில்குழந்தை தக்‌ஷனா, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் தீபா, பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News