இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.;
பட்டா கேட்டு, திருப்பூர் கலெக்டர்அலுவலகத்தில் மனு கொடுத்த பெண்கள்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேருராட்சிக்குட்பட்ட தேவராயன்பாளையம் பகுதியில், 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லாததால், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அவிநாசி வட்டாட்சியர், பூண்டி பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் மனு கொடுத்தனர்.
எனினும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 20 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று, இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.