திருப்பூரில் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியாரின்,143வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சுகாதாரத் தொழிலாளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.;

Update: 2021-09-17 07:07 GMT

தந்தை பெரியாரின்143வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, திருப்பூரில் சுகாதாரத் தொழிலாளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பாக, திருப்பூர் ஏஐடியுசி தொழிலாளர்கள் நலச்சங்தம் சார்பில், பெரியார் 143 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில், சமூகநீதி, சமத்துவம் போன்றவை வலியுறுத்தி, உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, திருப்பூர் பங்களா பஸ் ஸ்டாப்பில் நடந்தது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலச்சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News