நொய்யல் ஆறு சீரமைப்பு பணிகள்: திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

திருப்பூர் நொய்யல் ஆறு சீரமைப்பு பணிகளை எம்எல்ஏ செல்வராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2021-08-06 12:19 GMT

 திருப்பூர் நொய்யல் ஆறு சீரமைப்பு பணிகள் குறித்து தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. நொய்யல் ஆறு, நீர் சுத்திகரிப்பு, தடுப்பணை, பூங்கா என அழகுப்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

நகர பகுதியில்  நொய்யல் ஆற்றில் ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கும்,இரு கரைகளிலும் கான்கீரிட் அமைக்கப்பட உள்ளது. மேலும்,  ஆற்றில் இரண்டு புறமும் 60  இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு குழாய் அமைக்கப்படுகிறது. கழிவு நீர் முழுவதும்  சேகரிக்கப்பட்டு அணைப்பாளையம் பகுதியில்  கழிவு நீர் சுத்திகரிப்பு  நிலையம் அமைத்து, சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது. நொய்யல் ஆற்றில் நான்கு இடங்களில் தடுப்பணை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் பணிகளை எம்எல்ஏ.செல்வராஜ்  மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.




Tags:    

Similar News