திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
மருத்துவ படிப்புக்கான 2021 ம் ஆண்டு நீட் நுழைவு தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 28 மாணவ, மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர்.
நடப்பாண்டு முதல் திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் துவங்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 7 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தன.
அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் 480 பேர், சோளிபாளையம் லிட்டில் கிங் டம் பள்ளியில் 480 பேர், விஜயமங்கலம் சசூரி பொறியியல் கல்லூரி 420, திருமுருகன்பூண்டி ஏவிபி கலை அறிவியல் கல்லூரி 420, பாலா மெட்ரிக் பள்ளி 420, தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரி 328, உடுமலை விசாலாட்சி மகளிர் கல்லூரி 480 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் தேர்வுகளுக்காக இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் ஆதார் கார்டு, ஹால் டிக்கெட், போட்டோ உள்ளிட்ட ஆவணங்கள் சரிக்கப்பட்டது. உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கப்பட்ட பின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. தேர்வுமையங்களில் 300 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.