திருப்பூரில் வீட்டுக்கு வீடு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புறப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் பணி துவங்கப்பட்டு உள்ளது.

Update: 2021-08-05 09:17 GMT

திருப்பூரில் வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கும் பணி துவக்கம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீட்டுக்கு வெளிப்புறப்பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் கேவி ஆர் நகர் பகுதியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் துவங்கப்பட்டுள்ள, இத்திட்டத்தை தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், துவக்கி வைத்தார். தெருக்கள் வாரியாக வீடு, கடைகள், பஸ் ஸ்டாப் உள்ளிட்ட வெளிப்புறப்பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்க, அதற்கான உபகரணங்கள், கருவிகள், களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இப்பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News