திருப்பூர் நகரில் பலத்த மழை: மரம் விழுந்து கார் சேதம்
திருப்பூர் நகரில் காற்றுடன் பெய்த பலத்த மழையில் மரம் விழுந்து கார் சேதமடைந்தது.;
திருப்பூர் மாநகர சுற்று வட்டாரத்தில் பல்வேறு பகுதியில் இன்று மழை பெய்தது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையுடன், பலத்த காற்றும் வீசியது. ஒரு மணி நேரத்திற்கு பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையில் மாநகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மன் நகரில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில், காரின் கண்ணாடி சேதமடைந்தது.