முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனுப்பி வைப்பு
திருப்பூர் பாஜக சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.;
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க, திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் இன்று மதியம் 12 மணி அளவில் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதை புறக்கணித்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு முதல்வருக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தனர்.