திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜகவினர் வீட்டின் முன் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.;
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் , மக்கள் தங்கள் வீட்டில் சிலை வைத்துக் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் இந்து முன்னணி, பாஜகவினர் வீட்டு முன் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.