திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்து 13 வயது மாணவன் பரிதாப சாவு

திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்து 13 வயது மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-28 11:32 GMT

பைல் படம்

திருப்பூர் திருநகர் வீதியை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மகன் அஷ்வின்குமார்,13, அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 25 ம் தேதி நண்பர்களுடன் விளையாட சென்ற அஷ்வின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் திருநகர் காலனியில் ஒரு கிணற்றின் அருகே மாணவனின் ஆடைகள் இருந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கிணற்றில் இருந்த மாணவனின் உடலை மீட்டனர். நீச்சல் தெரியாததால் சிறுவன் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News