பாண்டியாறு–புன்னம்புழா திட்டம் நிறைவேற்ற கொடுவாயில் நாளை விவசாயிகள் கூட்டம்
பாண்டியாறு–புன்னம்புழா திட்டம் றைவேற்றக்கோரி கொடுவாயில் நாளை விவசாயிகள் கூட்டம் நடைபெறுகிறது.;
தமிழ்நாடு உழவர்கள் பேரவை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் விரோத சட்டங்கள்,வேளாண் மின்சார திருத்த மசோதா - 2021 ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். உழவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவுப் பொருட்களையும், உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும்.
அரசுகள் உணவு கொள்முதல் கூட்டுறவு சங்கங்களை தொடங்கி கொள்முதல் மக்களுக்கு சீரான விலையில் உணவுப் பொருட்களும் தொடர்ந்து கிடைக்கவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்.
உயர்மின் கோபுரங்கள், கெயில், ஐடிபிஎல், இனாம் நிலங்கள் ஆகிய விஷயங்களில் உழவர்களின் நில உரிமையை மீட்க வேண்டும்., கீழ்பவானி, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டங்களைப் பாதுகாக்கவும், ஆனைமலையாறு - நல்லாறு, பாண்டியாறு - புன்னம்புழா, திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
உப்பாறு, வட்டமலை அணைகளுக்கு நீர் ஏற்பாடு செய்துதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கொடுவாயில் நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு உழவர்களின் மாபெரும் பேரவை சார்பில் கூட்டம் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.