திருப்பூரில் செப்.25ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டு நீர்ப்பாசன அமைக்க வேளாண் உதவி மையம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.;
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செப், 25 ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டு உள்ள அறக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கான நடப்பு செப்டம்பர் மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம் 25ம்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக அணுகி குறைகளை தெரிவிக்கலாம். மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டு நீர்ப்பாசன அமைக்க வேளாண் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.