அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: சக ஆசிரியர்களுக்கு பரிசோதனை

கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிமாக மூடப்பட்டு பள்ளி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.;

Update: 2021-09-04 11:42 GMT

திருப்பூரில் அரசு ப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதியால் சக ஆசிரியர்களுக்கு பரிசோதனை நடந்தது.

திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடக்கிறது. தமிழ் பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிமாக மூடப்பட்டது. இந்நிலையில் இன்று பள்ளி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, பள்ளிக்கு வருகை வந்த சக ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


Tags:    

Similar News