கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.