பாரதியாரின் 100வது நினைவு தினம்: பாஜக சார்பில் பேச்சு போட்டி
பாரதியாரின் 100வது நினைவு தினத்தையொட்டி, திருப்பூரில் பாஜக சார்பில் பேச்சு போட்டி நடைபெற்றது.;
தேசியகவி பாரதியாரின் 100வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பாக இளநிலை பட்ட வகுப்புகளில் படிக்கும் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.
திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு அலுவலகத்தில் நடந்த இப்போட்டியில், பாரதியாரின் தேசிய சிந்தனைகள், பாரதியாரின் தெய்வீக கருத்துகள், பாரதி எனும் சமூக சீர் திருத்தவாதி, பெண்ணின் பெருமை மற்றும் உரிமை பேசிய பாரதி, தமிழ் வளர்த்த பாரதியார் ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவியர் பேசினர்.
நடுவர்களாக மாநில துணைத்தலைவர் தங்கராஜ், மாநில செயலாளர் ராஜமாணிக்கம், செயற்குழு பார்த்தீபன், மாவட்ட தலைவர் சுப்புராஜ், ஆர்எஸ்எஸ் பாண்டியன், சத்தீஸ்வரன் ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊரக நகர்ப்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் தினேஷ்குமார், தமிழ் வளர்ச்சிப்பிரிவு மாவட்ட தலைவர் திருஞானசம்பந்தமூர்த்தி, துணைத்தலைவர் இந்திரா கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் கார்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.