திருப்பூரில் நாளை முதல் தளர்வுகளுடன் அனுமதி
திருப்பூரில் காய்கறி கடை, இறைச்சி கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது
திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா நோய் பரவலை தடுக்க முழு ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது இந்த முழு ஊரடங்கு உத்தரவு நாளை (7ம் தேதி) முதல் 14 ம் தேதி வரை, மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தனியாக செயல்படும் மளிகை, பல சரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யுமு் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் சமூக இைடைவெளியை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவீத மட்டும் டோக்கன் வழங்கி பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தற்போதுள்ள நடமாடும் காய்கறி வானகங்கள் மூலம் காய்கறி விற்கப்படும் திட்டம் தொடரும். டூ வீலர் மற்றும் நான்கு சக்கரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.